×

தலையில் இடி... சிக்சருக்கு அடி!

மும்பை-ராஜஸ்தான் இடையிலான போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதல் இன்னிங்சில் 19வது ஓவரை ராஜஸ்தானின் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிக் கொண்டிருந்தார். அதன் முதல் 3 பந்துகளை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டார். அடுத்த 4வது பந்தை  சூர்யகுமார் யாதவ் எதிர்கொண்டார். ஆர்ச்சர் பவுன்சராக வீசிய பந்து, இடிபோல் சூர்யகுமாரின் ஹெல்மட்டை தாக்கியது. அதனால் அதிர்ந்து போனவர் ஹெல்மட்டை கழற்றி போட்டு விட்டு தலையை பிடித்துக் கொண்டார். உடனடியாக ஓடி வந்த மும்பை மருத்துவக்குழு  முதலுதவி செய்தது. லேசான தடுமாற்றம் இருந்தாலும், இயல்பு நிலைக்கு திரும்பினார் சூர்யகுமார்.

அதனால் அடுத்த பந்தை எதிர்கொண்டார். ஜோப்ரா மீது இருந்த கோபத்தை அந்த பந்து மீது காட்டி  அடிக்க அது சிக்சருக்கு பறந்தது. இடி போல் அடி வாங்கியும், அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பிய சூர்யகுமாருக்கு, தொலைக்காட்களில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் சமூக வலைத்தளங்களில் பாலோ செய்தவர்களும் பாராட்டு மழை பொழிந்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் 47 பந்துகளில் 79 ரன் அடித்தார். ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
இது குறித்து போட்டிக்கு பிறகு சூர்யகுமார் கூறுகையில், ‘இப்போது வலியில்லை. நன்றாக இருக்கிறது. கடந்த  சில ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. அதை சரி செய்வதற்கான வழிகளை கண்டறிந்தேன்.

அதனால் எனது ஆட்டம் நன்றாக இருக்கும் என்று உணர்ந்தேன். அடுத்தடுத்து 3 விக்கெட் வீழ்ந்த நிலையில், நான் என்னை நம்பி கடைசிவரை பேட்டிங் செய்ய முயற்சித்தேன். அதை செய்து முடித்தேன். அது எனக்கு அழுத்தமல்ல, அவர்கள் எனக்கு வழங்கிய  கூடுதல் பொறுப்பாக இதை நினைக்கிறேன். அணியின் வெற்றிதான் என்னை திருப்திப்படுத்தும் விஷயம்’ என்றார். அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்த நிலையில், அடுத்து களமிறங்கிய ராயல்ஸ் 18.1 ஓவரிலேயே 136 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பூம்ரா 4, போல்ட், பேட்டின்சன் தலா 2, ராகுல் சாஹர், போலார்டு ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags : Head banging ... sixes hit!
× RELATED பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ